என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » கமல்ஹாசன் கமல் அரசியல்
நீங்கள் தேடியது "கமல்ஹாசன் கமல் அரசியல்"
ஜனநாயக ஒளி தேசம் முழுவதும் பரவட்டும் என்று கர்நாடக அரசியல் குறித்து மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். #KarnatakaElection2018 #KamalHaasan
சென்னை:
கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் 104 தொகுதிகளில் வெற்றி பெற்ற பா.ஜ.க. மெஜாரிட்டி இல்லாத நிலையில் ஆட்சியமைத்தது. எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்றார். 15 நாட்கள் அவகாசம் பெற்று, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சிலரது ஆதரவுடன் சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க பா.ஜ.க. திட்டமிட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் உடனடியாக மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிட்டது.
அதன்படி நேற்று சட்டமன்ற சிறப்பு கூட்டம் நடைபெற்றது. காலையில் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றனர். 195 எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்ற பிறகு சட்டசபை 3.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. சட்டமன்றம் மீண்டும் கூடியபோது எடியூரப்பா தனது உரையை வாசித்தார்.
அப்போது உணர்ச்சிப்பெருக்குடன் தனது உரையை நிறைவு செய்த எடியூரப்பா, நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு போதிய உறுப்பினர்கள் ஆதரவு இல்லாததால் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
‘கர்நாடகத்தில் தோன்றியிருக்கும் ஜனநாயக ஒளி தேசமெங்கும் பரவட்டும். வாழிய பாரத மணித்திருநாடு’ என்று தெரிவித்துள்ளார். #KarnatakaElection2018 #KamalHaasan
×

X